கண்ணை மூடினேன் உன்னை – Kannai Moodinen Unnai theadinean

Deal Score+5
Deal Score+5

கண்ணை மூடினேன் உன்னை – Kannai Moodinen Unnai theadinean

கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்,
என் மனதின் கோயிலிலே
உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில், உருகிப்போகிறேன்,
எந்தன் மனம் உன் நினைவைப்
பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின், என்ன வேண்டுவேன்,
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய்
வருவாய் அருள் புரிவாய்
கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்.
என் மனதின் கோயிலிலே
உன் முகம் கண்டேன்

என்னை நீயும் அன்பு செய்யும்
அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது
நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம்
கழுவிச் சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு
கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண
சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள்
விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான்
மனதால் சரணடைந்தேன்
கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்,
என் மனதின் கோயிலிலே
உன் முகம் கண்டேன்

விழிகள் மூடி மௌனமாய் உன்
இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில்
தூங்கிப்போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை
மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக
ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு
உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள்
ஓலிக்கக் கேட்கிறேன்
இறைவா இனி நான் முழுதும்
உனதாய் மாறுகிறேன்
கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்,
என் மனதின் கோயிலிலே
உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவைப்
பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய்
வருவாய்.. அருள் புரிவாய்
கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே…
உன் முகம் கண்டேன்

Kannai Moodinen Unnai theadinean song lyrics in English

Kannai Moodinen Unnai theadinean
En Manthain koyililae
un mugam kandean
un muga anbil urugipogirean
Enthan manam un ninaivai
paada keatkirean
unnai kandapin enna veanduvean
enna veanduvean yesu deivamae
unnai naan piriya varamaai
varuvaai arul purivaai
Kannai Moodinen Unnai theadinean
En Manthain koyililae
un mugam kandean

Ennai neeyum Anbu seiyum
Alavai theadinean
Unthan Anbu mudivillathu
Neendu povathean
mandiyittu enathu paatham
kazhuvi sonna un
Anbin paadam Aazham Kandu
Kangal kalanguthae
Intha paadam vilakkam kaana
sigaram yearinean
Sigarathilae virintha karangal
vilakkam solluthae
Iraivan neethan ena naan
manathaal saranadainthean
Kannai Moodinen Unnai theadinean
En Manthain koyililae
un mugam kandean

Vizhigal moodi mounamaai un
idhayam saaikirean
thudikkum unathu idhaya oliyil
thoongi pogirean
uanthu kangal kaattum karunai
manathil theakkinean
manathu unathu kuralukkaga
yeangi vilikkirean
kuralai keatka yeakkathodu
unaiyae theadinean
unathu alagu kuralum enakkul
olikka keatkirean
iraiva ini naan muluthu
unathaai maarukirean
Kannai Moodinen Unnai theadinean
En Manthain koyililae
un mugam kandean

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo